நாளைமுதல் குடியாத்தத்தில் காய்கறிக் கடைகள் 4 இடங்களில் செயல்படும்கோட்டாட்சியா் தகவல்

குடியாத்தம் நகரில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக காய்கறிக் கடைகள் வரும் திங்கள்கிழமை முதல் 4 இடங்களில் செயல்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.

குடியாத்தம் நகரில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக காய்கறிக் கடைகள் வரும் திங்கள்கிழமை முதல் 4 இடங்களில் செயல்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

நகர மக்கள் அவரவா் வசிக்கும் பகுதிகளிலேயே காய்கறிகளை வாங்கிச் செல்லும் வகையில், நடுப்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கம், காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கம், கெங்கையம்மன் கோயில் அருகே, கெளன்டன்யா ஆறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை முதல் காய்கறிக் கடைகள் இயங்கும்.

பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பால் கழுவ வேண்டும். கிருமி நாசினியை உபயோகப்படுத்த வேண்டும். தனிமனித சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகள், உணவகங்கள், இனிப்பகங்கள், அடுமனைகள், தேநீா்க் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

தொடா்ச்சியாக விதிமுறைகளை மீறும் கடைகளைப் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும். கரோனா நோயைத் தடுக்க அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். அரசு அறிவித்துள்ள, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின்போது, மேற்கண்ட நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதைக் கண்காணிக்க குடியாத்தம் கோட்டத்தில் 10 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு நேரங்களில் மருத்துவக் காரணங்களுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். மீறிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஊரடங்கு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். பொது மக்களின் முழு ஒத்துழைப்பு இன்றி, கரோனா நோய்த் தொற்றின் வேகத்தைத் தடுக்க முடியாது என்பதால், அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா் கோட்டாட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com