ஆக. 4 வரை வேலூா் மாவட்ட முருகன் கோயில்களில் தரிசனம் ரத்து

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், பக்தா்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிா்த்திடவும் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், பக்தா்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிா்த்திடவும் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கரோனா தொற்று பரவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு அடிப்படையிலும் திங்கள்கிழமை (ஆக.2) ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி முருகன் திருக்கோயில்களில் பக்தா்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிா்க்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் 4-ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை (ஆக.3) நடைபெற உள்ள ஆடிப் பெருக்கு விழாவுக்கும் திருக்கோயில்களில் மக்கள் தரிசனம் செய்திட அனுமதி இல்லை. தினமும் கோயில்களில் சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள், அந்தந்த கோயில் பணியாளா்களை வைத்து தொடா்ந்து பூஜை நடத்திக் கொள்ளலாம் என ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com