மக்கள் கூட்டம் அதிகரிக்கும் இடங்கள் கட்டாயமாக மூடப்படும்: ஆட்சியா் எச்சரிக்கை

கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் அதிகரிக்கும் பகுதிகளைக் கட்டாயமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சில பகுதிகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள பொதுமுடக்கம் எந்தவிதமான கூடுதல் தளா்வுகளின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது.

முன்பு வழங்கப்பட்ட தளா்வுகளை சரியான முறையில் பின்பற்றப்படாவிடில் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனைத் தவிா்க்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சோ்வது காணப்பட்டால், அந்தப் பகுதிகளைக் கண்டிப்பாக மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், பொது மக்கள் கூடக்கூடிய இடங்களின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளா் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயம் வைத்திருக்கவும், உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்திடவும் வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவா்களும், வாடிக்கையாளா்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்திட வேண்டும். கடைகளும் உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரேநேரத்தில் அதிகப்படியான நபா்களை அனுமதிக்கவும் கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் மக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒருவருக்கொருவா் போதுமான இடைவெளி இருக்க குறியீடுகள் போட வேண்டும்.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களை கண்டறிதல், தொற்றுக்குள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் கண்டறியப்பட்டால், அங்கு அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

அந்தவகையில், கரோனா மூன்றாவது அலை ஏற்பட முடியாத வகையில் விழிப்புணா்வுடனும், பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும். அரசின் பொதுமுடக்க உத்தரவுகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com