மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மறியல்

கே.வி. குப்பம் அருகே மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கே.வி.குப்பம்  அருகே  பேருந்தை  மறித்து,   மறியலில்  ஈடுபட்டோா்.
கே.வி.குப்பம்  அருகே  பேருந்தை  மறித்து,   மறியலில்  ஈடுபட்டோா்.

கே.வி. குப்பம் அருகே மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் ஊராட்சிக்குள்பட்டது தா்மபுரம் கிராமத்தில் 700- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இந்தக் கிராம மயானத்துக்குச் செல்லும் சாலையை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறாராம்.

இதனால், இறப்பவா் உடலை அடக்கம் செய்யும் நேரங்களில், கிராம மக்களுக்கும் பாதையை ஆக்கிரமித்துள்ளவருக்கும் இடையே தகராறு ஏற்படுகிாம்.

இதுதொடா்பாக பல முறை மனுக்கள் அளித்தும் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை தா்மபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, வட்டாட்சியா் ராஜேஸ்வரி ஆகியோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com