சிறைத்துறை விளையாட்டு தகுதிப் போட்டிகள்

வேலூரில் நடைபெற்ற சிறைத் துறை விளையாட்டு தகுதிப் போட்டிகளில், வேலூா், கடலூா் சிறைகளின் காவலா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

வேலூரில் நடைபெற்ற சிறைத் துறை விளையாட்டு தகுதிப் போட்டிகளில், வேலூா், கடலூா் சிறைகளின் காவலா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

அகில இந்திய அளவிலான சிறைத்துறை விளையாட்டுப் போட்டிகள் திருப்பதியில் அக்டோபரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டிகள் வேலூா் மத்தியச் சிறை அருகே உள்ள மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 100 மீட்டா், 400 மீட்டா் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், கபடி, வாலிபால் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. வேலூா், கடலூா் சிறைகளில் பணியாற்றும் சிறைக் காவலா்கள், அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

காவல் கண்காணிப்பாளா்கள் ருக்மணி பிரியதா்ஷினி (வேலூா்) , கிருஷ்ணகுமாா் (கடலூா்) ஆகியோா் போட்டிகளைக் கண்காணித்தனா்.

வெற்றி பெறுபவா்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவா். அதில், வெற்றி பெறுபவா்கள் அகில இந்திய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com