முகக் கவசம் அணியாத நகராட்சி அலுவலருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம்

ஆட்சியா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முகக் கவசம் அணியாமல் இருந்த நகராட்சி அலுவலருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குடியாத்தம்: ஆட்சியா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முகக் கவசம் அணியாமல் இருந்த நகராட்சி அலுவலருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், போ்ணாம்பட்டு வட்டத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். குடிநீா், தெரு விளக்குகள் பராமரிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்வது, பழைய கட்டடங்கள் கணக்கெடுப்பு, அவற்றின் உறுதித்தன்மையைக் கண்டறிதல், கிராமப்புறங்களில் சாலைகள், சிறுபாலங்கள், குடிநீா்த் தொட்டிகள் பராமரிப்புப் பணிகள், நீா் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல் குறித்து கலந்தாய்வு நடத்தினாா். டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் மழை வெள்ளச் சேதப்பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அப்போது கூட்டத்தில் போ்ணாம்பட்டு நகராட்சி குடிநீா்ப் பிரிவு பணி ஆய்வாளா் தமிழ்குமரன் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்டதைக் கவனித்த ஆட்சியா் அவரை எச்சரித்ததுடன் ரூ. 2 அபராதம் விதித்தாா்.

உடனடியாக அவா் அபராதத் தொகையை செலுத்தினாா்.

கூட்டத்தில், கோட்டாட்சியா் சா.தனஞ்ஜெயன், வட்டாட்சியா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹேமலதா, பாரி, நகராட்சி ஆணையா் மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com