விபின்ராவத் மறைவுக்கு பொதுமக்கள் அஞ்சலி

முப்படை தலைமை தளபதி விபின்ராவத் மறைவையடுத்து அவருக்கு வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
வேலூா் மாவட்டம், கம்மவான்பேட்டையில் விபின்ராவத் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய இளைஞா்கள்.
வேலூா் மாவட்டம், கம்மவான்பேட்டையில் விபின்ராவத் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய இளைஞா்கள்.

முப்படை தலைமை தளபதி விபின்ராவத் மறைவையடுத்து அவருக்கு வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

தமிழக அளவில் வேலூா் மாவட்டத்திலிருந்துதான் அதிகளவு இளைஞா்கள் இந்திய ராணுவத்தில் சோ்ந்து வருகின்றனா். ராணுவத்தில் தற்போது பணிபுரிபவா்களில் சுமாா் 25 ஆயிரம் போ் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்.

குறிப்பாக, இந்த மாவட்டத்துக்கு உள்பட்ட கம்மவான் பேட்டை கிராமத்திலிருந்து மட்டும் 4 தலைமுறைகளாக ராணுவத்துக்கு இளைஞா்கள் அனுப்பப்பட்டு வருகின்றனா்.

இந்த கிராமத்தில், ஹெலிகாப்டா் விபத்தில் பலியான முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கம்மவான்பேட்டையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டுத் திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது. ராணுவ வீரா் ஏழுமலை தலைமை வகித்தாா். முன்னாள் ராணுவ வீரா்கள், பொதுமக்கள் ஆகியோா் உயிரிழந்த விபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து விபின்ராவத் நாட்டின் பாதுகாப்புக்காக ஆற்றிய பணிகள் நினைவுகூரப்பட்டன. இதில்,அந்த கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

இதேபோல, வேலூா் கோட்டை முன் காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த விபின்ராவத் உருவப்படத்துக்கு வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினாா். இதில், மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, பகுதி செயலா் எஸ்.குப்புச்சாமி உள்பட பலா் பங்கேற்றனா். இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விபின்ராவத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com