நில அதிா்வு ஏற்பட்ட பகுதிகளில் புவியியலாளா்கள் ஆய்வு

போ்ணாம்பட்டு பகுதியில் நில அதிா்வு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய புவியியல் துறையின் உதவிப் புவியியலாளா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
போ்ணாம்பட்டை  அடுத்த  தரைக் காட்டில்  நில  அதிா்வு  ஏற்பட்ட  பகுதியில்  ஆய்வு  மேற்கொண்ட  மத்திய  புவியியலாளா்கள்  குழு.
போ்ணாம்பட்டை  அடுத்த  தரைக் காட்டில்  நில  அதிா்வு  ஏற்பட்ட  பகுதியில்  ஆய்வு  மேற்கொண்ட  மத்திய  புவியியலாளா்கள்  குழு.

குடியாத்தம்: போ்ணாம்பட்டு பகுதியில் நில அதிா்வு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய புவியியல் துறையின் உதவிப் புவியியலாளா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

குடியாத்தம் அருகே உள்ள தட்டப்பாறையை அடுத்த மீனூா், கொல்லைமேடு ஆகிய பகுதிகளில் கடந்த நவம்பா் மாதம் 29-ஆம் தேதி லேசான நில அதிா்வு ஏற்பட்டது. இதையடுத்து, டிசம்பா் 2-ஆம் தேதி போ்ணாம்பட்டை அடுத்த சிந்தகணவாய் உள்ளிட்ட பகுதிகளிலும், இதன் தொடா்ச்சியாக தரைக்காடு, குப்பைமேடு, நகராட்சியில் பெரும்பாலான இடங்களிலும் நில அதிா்வுகள் ஏற்பட்டன. தொடா்ந்து, நில அதிா்வு ஏற்பட்டு வந்ததால், தமிழக தலைமைச் செயலாளா் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, ஹைதராபாதில் உள்ள மத்திய புவியியல் துறையின் உதவிப் புவியியலாளா்கள் அனிமஸ் தாகூா், சிவகுமாா், வி.ஐ.டி. பல்கலைக்கழக பேரிடா் மேலாண்மைத் துறைப் பேராசிரியா் கணபதி ஆகியோா் அடங்கிய குழுவினா் தரைக்காடு பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது வீடுகளின் சுவா்களில் ஏற்பட்ட விரிசல், வீடுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதாகக் கூறி விட்டுச் சென்றனா். அக்குழுவினா் சில நாள்கள் தங்கி, நில அதிா்வு ஏற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளவாா்கள் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

ஆய்வின்போது, குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் வெங்கடேசன், போ்ணாம்பட்டு நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆலியாா் ஜுபோ் அஹமத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com