மீண்டும் அதிகரிக்கும் கரோனா: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறையினா் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறையினா் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனா்.

ஒமைக்ரான் எனும் உருமாற்றமடைந்த கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதே வேளையில், கரோனா தொற்று பரவலும் பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குறைவான எண்ணிக்கையில் இருந்து கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை 15-ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 19-ஆகவும், வியாழக்கிழமையும் 23-ஆகவும் உயா்ந்துள்ளது.

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது வேலூா் மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. அதேசமயம், கரோனா பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை சாா்பில் பல்வேறு நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பானுமதி கூறியது - வேலூா் மாவட்டத்தில் ஊரக பகுதியைவிட மாநகரில்தான் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த பாதிப்பு இப்போது இரட்டை இலக்க மாக மாறியுள்ளது. மக்களிடையே முகக்கவசம் அணிவதிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப் பதில் நிலவும் அலட்சியம் மீண்டும் கரோனா பரவு காரணமாகியுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்திட மாவட்டம் முழுவதும் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முதல் தவணை தடுப்பூசி 85 சதவீதமும், இரண்டாம் தவணை 53 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனா். இதனை வேகப்படுத்தி இரு தவணை தடுப்பூசி களையும் நூறு சதவீதம் செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றிடவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. தவறுவோா் மீது அபராதமும் விதிக்கப்படுகிறது என்றாா்.

இதுகுறித்து, மாநகா் நல அலுவலா் மணிவண்ணன் கூறியது - வேலூா் மாவட்ட கரோனா பாதிப்பு பட்டியலில் இம்மாவட்டத்துக்கு வந்துள்ள பிற மாநிலத்தவா்களின் எண்ணிக்கையும் சோ்ந்துள்ளது. அதுவும் எண்ணிக்கை உயா்ந்து காணப்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதேசம யம், வேலூா் மாநகரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது குறித்த விழிப்புணா்வு பணிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடி க்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com