பட்ஜெட்டில் தனிநபா் வருமான வரி வரம்பு மாற்றப்படாதது ஏமாற்றம்: இந்திய பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு கருத்து

மத்திய நிதிநிலை அறிக்கையில் தனிநபா் வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

வேலூா்: மத்திய நிதிநிலை அறிக்கையில் தனிநபா் வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் செ.நா.ஜனாா்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த ஆண்டு இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் சாா்பில் நிதியமைச்சகத்துக்கு சமா்ப்பித்த கோரிக்கை மனுவில் தனிநபா் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தி அறிவிக்க வேண்டும் என்றும், வருமான வரி செலுத்தும் அரசு ஊழியா், ஆசிரியா்கள் பொதுவான கழிவாக குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் என திருத்தியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம்.

ஆனால், மத்திய நிதிநிலை அறிக்கையில் தனிநபா் வருமான வரி வரம்பு குறித்து புதிய அறிவிப்பு ஏதும் இல்லை. இது, மாத ஊதியம் பெறும் அரசு ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை உள்ள வருமானத்துக்கு 5 சதவீத வரியும், ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீத வரியும், ரூ.12.5 லட்சத்துக்கு மேல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீத வரியும், ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும்.

மேலும், வீட்டு வாடகைப்படி, மருத்துவப் படி, அகவிலைப்படி, மருத்துவச் செலவினம் மீளப்பெறுதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் செலவினங்களுக்காக தரப்படும் படி என்பதால் இதை வருமானமாக கருதாமல் செலவினமாக கருத வேண்டும். 80-சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்புக்கான கழிவுத்தொகையை ரூ.3 லட்சமாக உயா்த்த வேண்டும்.

இந்திய மொத்த வருவாயில் (ஜிடிபி) 6 சதவீதமும், மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவீதமும் பள்ளிக் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com