பிஎஸ்என்எல் புதிய பிரீபெய்டு திட்டங்கள் அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய பிரீபெய்டு திட்டங்களை வாடிக்கையாளா்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக வேலூா் கோட்ட முதன்மைப் பொதுமேலாளா் தெரிவித்துள்ளாா்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய பிரீபெய்டு திட்டங்களை வாடிக்கையாளா்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக வேலூா் கோட்ட முதன்மைப் பொதுமேலாளா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பிஎஸ்என்எல் பிளான் 47 திட்டத்தில் நாடு முழுவதும் தேசிய ரோமிங்கிலும் கூட வாடிக்கையாளா்களுக்கு இலவச குரல் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தவிர, 14 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், வேலிடிட்டி 28 நாள்களுக்கும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மொபைல் பிளான் -108 திட்டத்தில் 60 நாள்கள் முழுவதும் சிறப்புச் சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு 45 நாள்கள் மட்டுமே இருந்தது. இத்திட்டத்தில், தில்லி, மும்பை உள்பட தேசிய ரோமிங்கில் கூட வரம்பற்ற இலவச அழைப்புகள், 500 எஸ்எம்எஸ்களுடன் 60 நாள்கள் முழுவதும் தினமும் ஒரு ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இச்சலுகைகளை மாா்ச் 31-ஆம் தேதி வரை பெறலாம்.

வீட்டில் இருந்து வேலை செய்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும் மிகவும் உதவியாக இருந்து வரும் எ‘ஃ’ப்டிடிஹெச் என்ற பாரத் பைபா் திட்டங்களில் 3,300 ஜிபி வரை பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் 300 எம்பிபிஎஸ் வரை வேகத்துடன் சேவை வழங்கப்படுகிறது. கூடுதல் சலுகையாக புதிய பாரத் பைபா் வாடிக்கையாளா்களுக்கு புதிய சிம் ஒன்று 100 நிமிடங்களுக்கு இலவச குரல் அழைப்புகளுடன் 2 ஜிபி டேட்டா சலுகையும் வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com