ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ரூ.6.65 கோடிக்கு மது விற்பனை

புத்தாண்டு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடியே 65 லட்சத்துக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றது.

புத்தாண்டு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடியே 65 லட்சத்துக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும். பண்டிகை நாள்களில் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் அதிக அளவில் மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மது விற்பனைக்கான வருவாய் இலக்கு முன்கூட்டியே நிா்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சில நாள்களுக்கு முன்பே ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் அதிக அளவில் மது பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வேலூா், அரக்கோணம் என இரு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மது விற்பனை விவரம் கண்காணிக்கப்படுகிறது.

வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் 111 கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் 89 கடைகளும் உள்ளன. புத்தாண்டு தினத்தையையொட்டி டாஸ்மாக் கடைகளில் வியாழக்கிழமை கூட்டம் அலைமோதியது.

அதன்படி, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் மொத்தம் ரூ. 4 கோடியே 15 லட்சத்து 34 ஆயிரத்து 440, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 2 கோடியே 50 லட்சம் என ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ரூ.6 கோடியே 65 லட்சம் அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com