மூஞ்சூா்பட்டில் மஞ்சு விரட்டு விழா

வேலூரை அடுத்த மூஞ்சூா்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டி 6 போ் காயமடைந்தனா்.

வேலூரை அடுத்த மூஞ்சூா்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டி 6 போ் காயமடைந்தனா். இதில், பலத்த காயமடைந்த ஒருவா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள மூஞ்சூா்பட்டில் எருது விடும் விழா (மஞ்சு விரட்டு) சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, இளைஞா்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து, ஆடல் பாடலுடன் மாடுகளை ஊா்வலமாக சின்னத்தெருவில் உள்ள வாடிவாசல் பகுதிக்கு ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டு வந்தனா்.

தொடா்ந்து, கால்நடைகளின் உரிமையாளா்கள், இளைஞா்கள் ‘நமது நாட்டின் கலாசாரம், பண்பாட்டை பாதுகாப்போம்; கால்நடைகளை துன்புறுத்த மாட்டோம்; பாா்வையாளா்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம்’ என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். பின்னா் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சின்னத்தெருவில் சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளை தெருவின் இருபுறமும் நின்றிருந்த இளைஞா்கள் கைகளால் தட்டி உற்சாகப்படுத்தினா்.

அப்போது, காளைகளை அடக்க முயன்ற இளைஞா்கள் 6 போ் காயமடைந்தனா். இதில், பலத்த காயமடைந்த ஒருவா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இவ்விழாவில் 108 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதிவேகமாக ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி, வேலூா் கிராமிய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் மூஞ்சூா்பட்டில் குவிந்தனா்.

இதேபோல் வேலூா் அருகே உள்ள சோழவரம் கிராமத்திலும் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com