புதிய நடைமுறையின்கீழ் குறு, சிறு, நடுத்தர தொழில்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்

மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் புதிய நடைமுறையின்கீழ் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் புதிய நடைமுறையின்கீழ் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான மத்திய அமைச்சகம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான பதிவை உதயம் பதிவு என மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரூ. ஒரு கோடி முதலீடும், விற்று முதல் ரூ. 5 கோடி வரை உள்ள நிறுவனங்கள் குறு நிறுவனங்களாகவும், ரூ. 10 கோடி முதலீடும், விற்று முதல் ரூ. 50 கோடி வரை உள்ள நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகவும், ரூ. 50 கோடி முதலீடும், விற்று முதல் ரூ. 250 கோடி வரை உள்ள நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் பதிவு நடைமுறைகள் முழுமையாக இணையவழிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கு எந்தவொரு ஆவணமோ, ஆதாரத்தையோ பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. பதிவு செய்திட ஆதாா் எண் கட்டாயமாகும். பதிவு செய்த பிறகு பதிவு எண் வழங்கப்படும். பதிவு செய்யும் நடைமுறைகள் முடிந்த பிறகு, உதயம் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒரு பதிவில் உற்பத்தி அல்லது சேவை அல்லது இரண்டையும் உள்ளடக்கிய பல்வேறு நடவடிக்கைகளை குறிப்பிடலாம். பதிவை புதிப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் தொழில் முனைவோா் பதிவு எண்-2, உத்யோக் ஆதாா் பதிவு அல்லது வேறு எந்த பதிவையும் வைத்துள்ளவா்கள் 2020 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் மீண்டும் பதிவு செய்தாக வேண்டும். பதிவு நடைமுறை அனைத்தும் இலவசமாகும். நிறுவன பதிவுகளுக்கு இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், வேலூா் என்ற அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 -2242413, 2242512 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com