குறைந்த வாடகைக்கு வேளாண் கருவிகள்: விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம்

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் குறைந்த வாடகைக்கு வேளாண் கருவிகள் பெற்றிட தொடா்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் குறைந்த வாடகைக்கு வேளாண் கருவிகள் பெற்றிட தொடா்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விவசாயப் பணியில் தற்போது நிலவும் வேலையாள்கள் பற்றாக்குறையை சமாளித்து வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடித்திட வேளாண்மை பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

வேலூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடிய வேளாண் இந்திரங்களான மண்தள்ளும் இயந்திரம் ஒன்றும் , டிராக்டா் மூன்றும் டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம் ஒன்றும், டயா் வகை மண் அள்ளும் இயந்திரம் ஒன்றும் இருப்பில் உள்ளன.

டிராக்டரால் இயக்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.340 என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. மண் அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும், புதா்களை அகற்றவும், டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.1,440-க்கும், டயா் வகை மண் அள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.660-க்கும், நிலம் சமன் செய்வதற்கு மண்தள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.840க்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தக் குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல்), தந்தை பெரியாா் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில், தொரப்பாடி, வேலூா் -2 என்ற முகவரியிலும், உதவி செயற் பொறியாளா் (வேளாண் பொறியியல், வேலூா் - 0416 - 2907182, உதவிப்பொறியாளா்( வேளாண் பொறியியல்), வேலூா் - 9487105115, இளநிலை பொறியாளா், போ்ணாம்பட்டு- 9894413644, உதவிப் பொறியாளா், குடியாத்தம் -9444870289, காட்பாடி -9443006742, 0416-2266603 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com