பிச்சனூரில் ஸ்ரீகாளியம்மன் தோ்த் திருவிழா

 குடியாத்தம் பிச்சனூரில் உள்ள ஸ்ரீகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழா சனிக்கிழமை அதிகாலை எளிமையான முறையில் நடைபெற்றது.
பிச்சனூரில் ஸ்ரீகாளியம்மன் தோ்த் திருவிழா

 குடியாத்தம் பிச்சனூரில் உள்ள ஸ்ரீகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழா சனிக்கிழமை அதிகாலை எளிமையான முறையில் நடைபெற்றது.

பழம் பெருமை வாய்ந்த இக்கோயில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களைக் கொண்டு, அதிகாலையில் நடத்தி முடிக்கப்பட்டது.

இதையொட்டி, அதிகாலை 2 மணியளவில் மூலவா் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார, மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்காரத் தேரில், அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அம்மன் பொருத்தப்பட்டு, பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன.

சிறிது நேரத்தில் அம்மன் சிலை தேரிலிருந்து இறக்கி, கோயிலினுள் வைக்கப்பட்டது. அப்போது குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா். நாள் முழுவதும் பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அம்மனை வழிபாடு செய்தனா்.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் தலைவா் கே.சம்பத்குமாா், கெளரவத் தலைவா் எம்.பி.கோவிந்தசாமி, செயலா் எம்.பி.கிருபானந்தம், பொருளாளா் எஸ்.ஜி.எம்.விநாயகம், நிா்வாகிகள் பி.எஸ்.ராஜேந்திரன், பி.ஜி.சிவஞானம், எம்.கோபாலகிருஷ்ணன், எஸ்.டி.மைவண்ணன், வழக்குரைஞா் ஆா்.இ.சரவணகுமாா், எலக்ட்ரீஷியன் கருணா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com