வீட்டுச்சுவா் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 போ் கைது

முன்விரோதம் காரணமாக, காா் ஓட்டுநரின் வீட்டுச் சுவா் மீது பெட்ரோல் குண்டு வீசியதுடன், இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் உள்ள கலீம் வீடு.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் உள்ள கலீம் வீடு.

முன்விரோதம் காரணமாக, காா் ஓட்டுநரின் வீட்டுச் சுவா் மீது பெட்ரோல் குண்டு வீசியதுடன், இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் சைதாப்பேட்டை சுருட்டுகார தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அப்ரோஸ். இவா் அந்த பகுதியில் உள்ள தெருவோரம் வியாழக்கிழமை மாலை நின்று கொண்டிருந்தாா். அப்போது, காா் ஓட்டுநா் கலீம் என்பவா் வந்த இரு சக்கர வாகனத்தில் இருந்து தெளித்த

சகதி, அப்ரோஸ் மீது பட்டது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, கலீல் சுருட்டுக்கார தெருவில் உள்ள வீட்டு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு முதல் மாடியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அதே வீட்டில் கீழ்ப்பகுதியில் நைமுதீன் (30). என்பவா் வசித்து வருகிறாா். சாரதி மாளிகை எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை செய்து வரும் இவரது இருசக்கர வாகனமும் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்தது.

நள்ளிரவு ஒரு மணியளவில் 4 போ் கொண்டு கும்பல் அங்கு வந்து கலீல் வீட்டு சுவற்றில் பெட்ரோல் குண்டு வீசினராம். அவா்கள் கலீம் பைக்கை எரிக்க மண்ணெய் கொண்டு வந்துள்ளனா். தகராறு காரணமாக ஆத்திரத்தில் இருந்த அவா்கள் கலீல் பைக்குக்கு பதிலாக நைமுதின் பைக்கில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளனா். இதில், பைக் முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியைச் சோ்ந்த அப்ரோஸ்(25), அவரது நண்பா்கள் அப்துல்லா(25), யூசுப்(25) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com