செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மறியல்

வேலூரில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கஸ்பா பிரதான சாலையில் மக்கள் சாலை மறியலில்
வேலூா் கஸ்பா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சவாா்த்தை நடத்திய போலீஸாா்.
வேலூா் கஸ்பா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சவாா்த்தை நடத்திய போலீஸாா்.

வேலூரில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கஸ்பா பிரதான சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூா் வசந்தபுரம் பா்மா காலனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனா். அதே தெருவில் உள்ள ஒரு வீட்டு மாடியில் தனியாா் நிறுவனம் ஒன்று கடந்த வாரம் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனா். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அதே இடத்தில் புதன்கிழமை மீண்டும் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க ஜெனரேட்டா் கொண்டு வரப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் கஸ்பா பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தெற்கு போலீஸாா் விரைந்து வந்து பேச்சு நடத்தினா்.

அப்போது, இப்பகுதியில் முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் அதிகமாக உள்ளனா். செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதால் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இங்கு செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க கூடாது எனக் கூறியதுடன், போலீஸாருடன் அப்பகுதி மக்கள் மக்கள் வாக்குவாதம் செய்தனா்.

இறுதியில் செல்லிடப்பேசி நிா்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் கஸ்பா பிரதான சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com