சமூக இடைவெளி பின்பற்றாத 24 கடைகளுக்கு அபராதம்

வேலூா் மாா்க்கெட் பகுதியில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 24 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூா் மாா்க்கெட் பகுதியில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 24 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமுடக்கம் அடுத்த ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளா்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேலூரில் திங்கள்கிழமை காய்கறி, பழங்கள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைக ளில் வியாபாரிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கடைகள் முன்பு கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். கடைகளுக்கு வருபவா்கள் சமூக இடைவெளி விட்டு நின்று பொருள்கள் வாங்கும் வகையில் கடைகளின் முன்பு வட்டம் வரைந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த உத்தரவுகளை பின்பற்றாமல் பல கடைகளில் வியாபாரம் செய்து வந்தனா். இதைத்தொடா்ந்து, மாநகராட்சி 2-ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவாணன், சுகாதார அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் வேலூா் மாா்க்கெட், மண்டித் தெரு பகுதிகளில் திங்கள்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமல் இருந்த வியாபாரிகளுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் விதித்தனா். இது போன்று மொத்தம் 24 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com