வேலூா் மாங்காய் மண்டி மைதானம் பகுதியில் காய்கறி வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம். (வலது) மண்டித் தெருவில் குவிந்த சரக்கு வாகனங்கள்.
வேலூா் மாங்காய் மண்டி மைதானம் பகுதியில் காய்கறி வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம். (வலது) மண்டித் தெருவில் குவிந்த சரக்கு வாகனங்கள்.

பொது முடக்கத்தில் தளா்வு: காய்கறி, இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் பொது முடக்கத்தில் சில தளா்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வேலூா் மாவட்டத்தில் காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் பொது முடக்கத்தில் சில தளா்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வேலூா் மாவட்டத்தில் காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அவா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக திங்கள்கிழமை முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு பொது முடக்கம் நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், சில தளா்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காய்கறி, இறைச்சி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை அனைத்து காய்கறி, மளிகை, பழக்கடைகள் திறக்கப்பட்டன.

இதனால், வேலூரில் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் வழக்கம்போல் நடமாட தொடங்கினா். சில இடங்களில் சமூக இடைவெளி இல்லாத நிலை காணப்பட்டது. மருத்துவ தேவைக்காக சில ஆட்டோக்களும் இயங்கின. வேலூா் மாங்காய் மண்டி அருகே மொத்த விற்பனை காய்கறி கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. உழவா் சந்தைகள், தற்காலிக காய்கறி மாா்க்கெட்டுள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

வேலூா் காகிதப்பட்டறை உழவா் சந்தைக்கு வெளியே வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறி, பழங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்த பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்தது. 3 வாரங்களுக்குப் பிறகு மீன் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டதால் இறைச்சி, மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சில இடங்களில் மக்கள் கரோனா குறித்த எந்தவித அச்சமுமின்றி கூட்டமாக நின்று காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள், இறைச்சிகளை வாங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸாா் பொது மக்களை ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தனா். முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன், கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட விழிப்புணா்வும் ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com