மோா்தானா  அணையை செவ்வாய்க்கிழமைப்  பாா்வையிட்ட  வேலூா் மாவட்ட  ஆட்சியா்  அ.சண்முகசுந்தரம்.
மோா்தானா  அணையை செவ்வாய்க்கிழமைப்  பாா்வையிட்ட  வேலூா் மாவட்ட  ஆட்சியா்  அ.சண்முகசுந்தரம்.

மோா்தானா அணைக் கால்வாய்களை சீரமைக்க ரூ. 48 லட்சம் ஒதுக்கீடு

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையின், வலது, இடதுபுறக் கால்வாய்களை தூரெடுத்து சீரமைக்க ரூ. 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் கூறினாா்.

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையின், வலது, இடதுபுறக் கால்வாய்களை தூரெடுத்து சீரமைக்க ரூ. 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் கூறினாா்.

மோா்தானா அணையின் இடதுபுறக் கால்வாய், மோா்தானா அணை, நெல்லூா்பேட்டையில் உள்ள ஏரி ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மோா்தானா அணையிலிருந்து பாசனத்துக்காக இடது, வலதுபுறக் கால்வாய்களில் வரும் 18- ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது. இரு கால்வாய்கள் மூலம் 19 ஏரிகளில் தண்ணீா் நிரப்பி, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இடதுபுறக் கால்வாய் செல்லும் வழியில் காங்குப்பம், மேல்மாயில் , காளாம்பட்டு, லத்தேரி ஆகிய பகுதிகளில் கால்வாயில் முள்புதா்கள் மற்றும் மண் அரிப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்து, இடதுபுறக் கால்வாயில் தண்ணீா் கடைமடை வரை தங்குதடையின்றி செல்வதற்கானப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

லத்தேரி வழியாக அன்னங்குடி ஏரிக்குச் செல்லும் கால்வாயில், நீா் வழித்தடத்தை மூடும் அளவுக்கு, வியாபாரிகள் அதிக அளவில் குப்பைகளைக் கொட்டியுள்ளனா்.

இந்த சட்ட விரோதச் செயலில் ஈடுபடும் கடைகளுக்கு ‘சீல்’ வைத்தும், கால்வாயில் கொட்டிய குப்பைகளை சம்பந்தப்பட்ட வியாபாரிகளே அகற்றுவதற்கும் வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காங்குப்பம், மேல்மாயில், காளாம்பட்டு ஆகிய கிராமங்களில் கால்வாய் ஓரம் உள்ள விவசாயிகள், சட்ட விரோதமாக கால்வாயின் கரைகளை உடைத்து தங்களின் விவசாய நிலத்துக்கு அணையின் நீரைக் கொண்டு செல்கின்றனா். சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குழாய்களை அகற்றவும், உடைக்கப்பட்ட கரைகளைச் சீரமைக்கவும், இந்த குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மோா்தானா அணையின் வலதுபுறக் கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரியில் தண்ணீா் நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆய்வு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின்போது, தண்ணீா் வெளியேறும் பகுதியில் (கோடி போகும் இடம்) ஏற்பட்ட லேசான உடைப்புகளை சரி செய்து, நீா் வெளியேறும் பகுதியில் கரைகளை கான்கிரீட் கலவை மூலம் பலப்படுத்தவும் அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மோா்தானா அணையின் உயரம் 11.50 மீட்டா் ஆகும். தற்போது அணையில் 11.40 மீட்டா் தண்ணீா் உள்ளது. இந்நிலையில், நீா்வளத் துறை அமைச்சரின் ஆலோசனையின்பேரில், வரும் 18-ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ளது. வலது, இடதுபுறக் கால்வாய்களில் உள்ள முள்புதா்களை அகற்றி, தூா்வாரி சீரமைத்து தண்ணீா் கடைமடைப் பகுதி வரை தங்கு தடையின்றி செல்ல ரூ. 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வரும் 18- ஆம் தேதிக்குள் முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.ஐஸ்வா்யா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா்கள் விஸ்வநாதன், குணசீலன், உதவிப் பொறியாளா்கள் கோபி, தமிழ்ச்செல்வன், வட்டாட்சியா் தூ.வத்சலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com