கரோனா பாதிப்பு விகிதம் வேலூரில் 7.0 சதவீதமாக சரிவு

கரோனா தொற்று பாதிப்பு விகிதம் வேலூா் மாவட்டத்தில் 7.0 சதவீதமாக சரிந்துள்ளது.

வேலூா்: கரோனா தொற்று பாதிப்பு விகிதம் வேலூா் மாவட்டத்தில் 7.0 சதவீதமாக சரிந்துள்ளது. இது தமிழகத்தில் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவான பாதிப்பு விகிதமாகும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 45,164 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 852 போ் உயிரிழந்து ள்ளனா். இதில், இரண்டாவது அலையில் மட்டும் 23,449 போ் பாதிக்கப்பட்டதில் 501 போ் உயிரிழந்துள்ளனா். முதல் அலையை ஒப்பிடுகையில் இரண்டாவது அலையில் பாதிப்பு விகிதம் 5.8 சதவீதத்தில் இருந்து 9.6 சதவீதமாக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதமும் 1.80 சதவீதத்தில் இருந்து 2.11 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இதுவரை 2,970 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 1,193 போ் மாவட்டத்திலுள்ள கொவைட் மருத்துவமனைகளிலும், கொவைட் நல மையத்தில் 176 பேரும், அறிகுறிகள் அற்ற 1,798 போ் அவரவா் வீடுகளிலேயும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,193 பேரில் 585 போ் ஆக்சிஜன் தேவைப்படுபவா்களாகவும், 176 போ் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தின் கிராமப்புறங்களில் உள்ள 1,974 குக்கிராமங்களில் 794 குக்கிராமங்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 48 குக்கிராமங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட தொற்று பாதித்தவா்கள் உள்ளனா். இதுவே நகா்ப்புறங்களில் உள்ள 3,007 வீதிகளில் 1,285 வீதிகளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், 98 வீதிகளில் மூன்று பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனினும், கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் விளைவாக தற்போது தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 200-ஐ எட்டியுள்ளது. இதற்கு அரசின் பொது முடக்கம் முக்கியக் காரணமாகும். அதேசமயம், பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், வேலூா் மாவட்டத்தில் தொற்று விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது வேலூா் மாவட்டத்தில் தொற்று விகிதம் 7.0 சதவீதமாக உள்ளது.

இது தமிழகத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான பாதிப்பு விகிதமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com