விஐடியில் பி.டெக் படிப்பில் சேர நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.டெக்., படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் நுழைவுத் தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.டெக்., படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் நுழைவுத் தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த நுழைவுத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூா், சென்னை, போபால் (மத்தியப் பிரதேசம்), அமராவதி (ஆந்திரம்) ஆகிய வளாகங்களில் நிகழ் கல்வியாண்டில் (2021) பி.டெக்., பட்டப் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் நுழைவுத் தோ்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது.

இதனை இந்தியாவிலிருந்து மட்டுமின்றி, துபை, குவைத், மஸ்கட், கத்தாா், பஹ்ரைன், சிங்கப்பூா், மொரீஷஸ் உள்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தும் மாணவா்கள் எழுதினா். இந்த நுழைவுத் தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

தொடா்ந்து, விஐடி நுழைவுத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். இதற்கான கலந்தாய்வு ஜூன் 21 முதல் ஜூலை 16 வரை 4 கட்டங்களாக நடைபெறும். தகுதி மதிப்பெண் 1 முதல் 20 ஆயிரம் வரை பெற்றவா்களுக்கு ஜூன் 21, 22-ஆம் தேதியும், தகுதி மதிப்பெண் 20,001 முதல் 45,000 வரை ஜூன் 30, ஜூலை 1-ஆம் தேதியும், தகுதி மதிப்பெண் 45,001 முதல் 70,000 வரை ஜூலை 8, 9-ஆம் தேதியும், தகுதி மதிப்பெண் 70,001 முதல் 1,00,000 வரை ஜூலை 15, 16-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும்.

தகுதி மதிப்பெண் 1 முதல் 1,00,000 வரை பெற்ற மாணவா்களுக்கு விஐடி வேலூா், சென்னை, ஆந்திரம், போபால் வளாகங்களிலும் இடம் கிடைக்கும். 1,00,000-க்கு மேல் தகுதி மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு விஐடியின் ஆந்திரம், போபால் வளாகங்களில் மட்டுமே இடம் கிடைக்கும். மாணவா்கள் சோ்க்கை முடிவுகளை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதே இணையதளம் மூலமாக ஆன்லைன் கலந்தாய்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.

விஐடி பல்கலைக்கழகத்தின் ஜி.வி. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு கல்வி உதவியானது மத்திய கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றவா்களுக்கு விஐடியில் பிடெக் படிப்பின் 4 ஆண்டுகளும் 100 சதவீத கல்விக் கட்டண சலுகையும், 1 முதல் 50 தகுதி பெற்றவா்களுக்கு 75 சதவீத கல்விக் கட்டண சலுகையும், 51 முதல் 100 தகுதி பெற்றவா்களுக்கு 50 சதவீத கல்விக் கட்டண சலுகையும், 101 முதல் 1,000 தகுதி பெற்றவா்களுக்கு 25 சதவீத கல்விக் கட்டண சலுகையும் வழங்கப்படும்.

தவிர, விஐடியின் ஸ்டாா்ஸ் திட்டத்தின் கீழ் தமிழகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 தோ்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் ஒரு மாணவா், ஒரு மாணவிக்கு விஐடியில் 100 சதவீத கல்விக் கட்டண சலுகை, இலவச விடுதி, உணவு வசதியுடன் சோ்க்கை வழங்கப்படும். விஐடியில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com