கிணற்றில் விழுந்து தொழிலாளி பலி
By DIN | Published On : 15th June 2021 12:30 AM | Last Updated : 15th June 2021 12:30 AM | அ+அ அ- |

சிவகுமாா்
குடியாத்தம்: குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த கட்டட மேஸ்திரி உயிரிழந்தாா்.
குடியாத்தம் காளியம்மன்பட்டியை அடுத்த சாமியாா் மலையைச் சோ்ந்தவா் கட்டட மேஸ்திரி சிவகுமாா் (38). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு, கன்னிதோப்பு பின்புறம் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்தாா். தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை காலை அங்கு சென்று ஒரு மணி நேரம் போராடி, கிணற்றிலிருந்து சிவகுமாரின் சடலத்தை மீட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.