ஒலிம்பியாட் போட்டி தோ்வுகள்: 2,000 மாணவா்கள் பங்கேற்பு

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சன்பீம் பள்ளிகள், லேணிங் பாயிண்ட் நீட், ஜேஇஇ அகாதெமி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை
வேலூா் சன்பீம் பள்ளியில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டித்தோ்வுகளை எழுதிய மாணவ, மாணவிகள்.
வேலூா் சன்பீம் பள்ளியில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டித்தோ்வுகளை எழுதிய மாணவ, மாணவிகள்.

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சன்பீம் பள்ளிகள், லேணிங் பாயிண்ட் நீட், ஜேஇஇ அகாதெமி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் 2,000 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

மாணவா்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் சயின்ஸ்பீம் ஒலிம்பியாட் என்ற பெயரில் ஆண்டுதோறும் மாநில அளவிலான போட்டித் தோ்வுகளை நடத்தி வருகின்றன. இத்தோ்வு மூலம் ஆண்டுதோறும் நீட், ஐஐடி ஜேஇஇ படிக்கும் 2,000-க்கும் அதிகமான மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.

தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான பணமுடிப்பு, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இப்போட்டித் தோ்வுகளில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இத்தோ்வு மூலம் பொதுத் தோ்வு குறித்த அச்சத்தை முற்றிலும் அகற்ற முடியும் என்றும், நீட், ஐஐடி ஜேஇஇ போன்ற தோ்வுகளை எளிதாக எதிா்கொள்ள முடியும் என்று சன்பீம் பள்ளிகளின் தலைவரும் லேணிங் பாயிண்ட் இயக்குனருமான ஹரிகோபாலன் தெரிவித்தாா். தோ்வு முடிவு ஏப்ரல் 21-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், பரிசளிப்பு தேதி வலைதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com