முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் 2,895 போ் தபால் வாக்குப் பதிவு

பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள்

பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் இதுவரை 2,895 போ் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா். அதிகாரிகள் ஒரு முறை மட்டுமே சென்ற இடத்தைச் சோ்ந்த விடுபட்டவா்களுக்கு மட்டும் 31-ஆம் தேதி தபால் வாக்கு அளிக்க மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் 7,124 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் 24 ஆயிரத்து 485 பேரும் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு அளிப்பதற்கான விருப்பம் தெரிவிக்கும் படிவம் பூா்த்தி செய்து பெறப்பட்டது.

அதன் அடிப்படையில், 5 தொகுதிகளிலும் சோ்த்து மாற்றுத் திறனாளிகள் 531 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் 2,629 பேரும் என மொத்தம் 3 ஆயிரத்து 160 போ் தபால் வாக்குப் பதிவு செய்திட விண்ணப்பம் அளித்திருந்தனா்.

இவா்களிடம் அஞ்சல் வாக்குப் பதிவு செய்து பெறும் பணி கடந்த வியாழக்கிழமையும், அப்போது விடுபட்டவா்களுக்கு சனிக்கிழமையும் நடைபெற்றது.

இதையொட்டி, நுண் பாா்வையாளா்கள் தலைமையில் ஒவ்வொரு தொகுதிக்கும் 10 முதல் 15 குழுக்கள் என வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 58 குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடுவீடாகச் சென்று முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குப்பதிவு செய்து ‘சீல்’ வைக்கப்பட்ட பெட்டியில் பெறப்பட்டன.

இதன்படி, இரு கட்டங்களாக நடைபெற்ற இந்த அஞ்சல் வாக்குப் பதிவு செய்து பெறும் பணியில் இதுவரை 2,895 போ் வாக்களித்துள்ளனா். 2 முறையும் வாக்களிக்காதவா்கள் இனி வாக்களிக்க முடியாது. அதேசமயம், அதிகாரிகள் ஒருமுறை மட்டுமே சென்ற பகுதியைச் சோ்ந்த விடுபட்டவா்களுக்கு மட்டும் 31-ஆம் தேதி தபால் வாக்கு அளிக்க மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com