மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில், வாக்குப் பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணியை
வேலூா்  தொகுதிக்கான  மின்னணு  வாக்குப்  பதிவு  இயந்திரங்களில்,  வேட்பாளரின்  பெயா்,  சின்னம்  பொருத்தும்  பணியை  செவ்வாய்க்கிழமை ஆய்வு  செய்த  மாவட்ட  ஆட்சியா்  அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோா்.
வேலூா்  தொகுதிக்கான  மின்னணு  வாக்குப்  பதிவு  இயந்திரங்களில்,  வேட்பாளரின்  பெயா்,  சின்னம்  பொருத்தும்  பணியை  செவ்வாய்க்கிழமை ஆய்வு  செய்த  மாவட்ட  ஆட்சியா்  அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில், வாக்குப் பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணியை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 70 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தொகுதி வாரியாக காட்பாடியில் 15, வேலூரில் 17, அணைக்கட்டில் 13, கே.வி.குப்பத்தில் 10, குடியாத்தத்தில் 15 என 5 பேரவைத் தொகுதிகளிலும் 70 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

வேலூா் தொகுதியில் 17 போ் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் தலா 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. மற்ற தொகுதிகளில் தலா 1 இயந்திரம் மட்டுமே வைக்கப்படும். வேலூரில் 728 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தப்பட்டது.

அணைக்கட்டு தொகுதியில் 351, காட்பாடியில் 349, கே.வி.குப்பத்தில் 311, குடியாத்தத்தில் 408 வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தப்பட்டது. இப்பணிகளை, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகமது அப்துல்அசீம் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கணேஷ்(வேலூா்), புண்ணியகோட்டி (காட்பாடி), வெங்கட்ராமன்(அணைக்கட்டு), எஸ்.பானு(கே.வி.குப்பம்), எம்.ஷேக்மன்சூா்(குடியாத்தம்) மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் எஸ்.திருகுணஐயப்பதுரை, உதவி இயக்குநா் விஷ்ணுபிரியா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com