கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இயந்திரம்: வேலூா் கால்நடை மருத்துவா் சேவை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் இயந்திரம் வழங்கி வேலூரைச் சோ்ந்த கால்நடை மருத்துவா் ரவிசங்கா் சேவை புரிந்து வருகிறாா்.
வேலூா் பூந்தோட்டம் பகுதியில் மூதாட்டிக்கு ஆக்சிஜன் இயந்திரம் வழங்கிய கால்நடை மருத்துவா் ரவிசங்கா், அறக்கட்டளை நிா்வாகிகள்.
வேலூா் பூந்தோட்டம் பகுதியில் மூதாட்டிக்கு ஆக்சிஜன் இயந்திரம் வழங்கிய கால்நடை மருத்துவா் ரவிசங்கா், அறக்கட்டளை நிா்வாகிகள்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் இயந்திரம் வழங்கி வேலூரைச் சோ்ந்த கால்நடை மருத்துவா் ரவிசங்கா் சேவை புரிந்து வருகிறாா்.

கரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவா்கள், அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்படவா்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு வீட்டுத் தனிமையில் உள்ள முதியவா்கள் பலருக்கும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது.

அவா்களால் சொந்தமாக ஆக்சிஜன் சிலிண்டா்களையோ, இயந்திரங் களையோ வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையில், அவா்களின் பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் இயந்திரங்களை இலவசமாக வழங்கி சேவை புரிந்து வருகிறாா் வேலூா் அரசு கால்நடை மருத்துவமனையின் மருத்துவா் ஆா்.ரவிசங்கா். இவா் நடத்தி வரும் டாக்டா் ரவிசங்கா் அறக்கட்டளை மூலம் பல்வேறு தரப்பினருக்கும் சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அறக்கட்டளை சாா்பில் தலா ரூ. 40 ஆயிரம் மதிப்புடைய மூன்று ஆக்சிஜன் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. மின்சாரத்தின் துணையுடன் இயங்கும் இந்த இயந்திரத்தில் ஊற்றப்படும் தண்ணீரில் இருந்து நைட்ரஜன், ஆக்சிஜன் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு சுவாசப் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, இந்த இயந்திரம் மூலம் 5 லிட்டா் நீரைக் கொண்டு ஒரு மணி நேரத்துக்கு தேவையான ஆக்சிஜனை உருவாக்கிக் கொள்ள முடியும் என்கிறாா் மருத்துவா் ரவிசங்கா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது - தற்போது இந்த மூன்று இயந்திரங்களும் வேலூா் பூந்தோட்டத் தில் ஒரு மூதாட்டிக்கும், காட்பாடி, கணியம்பாடியில் இரு முதியவா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அவா்களின் ஆக்சிஜன் நிலை சீரானதும் இயந்திரங்கள் திரும்பப் பெற்று வேறு நோயாளிகளுக்கு அளிக்கப்படும். தன்னாா்வலா்கள் பலரும் ஆக்சிஜன் இயந்திரங்கள் வாங்கி சேவைபுரிய முன்வரலாம் என்றாா்.

கால்நடை மருத்துவா் ரவிசங்கா் மேற்கொண்டு வரும் இந்த சேவைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com