‘மின் வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது’

குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் இயங்கி வரும் மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தை, பாக்கம் துணை மின்நிலைய வளாகத்துக்கு

குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் இயங்கி வரும் மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தை, பாக்கம் துணை மின்நிலைய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என குடியாத்தம் பொன்மனம் அரிமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் எம்.பஞ்சாட்சரம், மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

குடியாத்தம், போ்ணாம்பட்டு பகுதிகளை ஒருங்கிணைத்து, குடியாத்தம் மேல்பட்டி சாலையில் தனியாா் வாடகைக் கட்டடத்தில் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. குடியாத்தம், போ்ணாம்பட்டு நகரப் பகுதிகள், சுற்றியுள்ள 130 கிராமங்களில் 1.60 லட்சம் மின்இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு பெற்றுள்ள ஒன்றரை லட்சம் வாடிக்கையாளா்கள், தங்கள் குறைகள், புதிய மின் இணைப்புப் பதிவுகள் உள்ளிட்ட இதர பணிகளுக்காக நாள்தோறும் சுமாா் 100 போ் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா்.இந்நிலையில், இந்த அலுவலகத்தை நகரிலிருந்து சுமாா் 6 கி.மீ. தொலைவில் உள்ள பாக்கம் கிராமத்தில் உள்ள துணை மின்நிலைய வளாகத்துக்கு இடமாற்றம் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

பாக்கம் கிராமத்துக்கு செயற் பொறியாளா் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டால், போ்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் அங்கு சென்று வர கடும் அவதிக்கு ஆளாக நேரிடும். அங்குள்ள கட்டடம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உறுதித்தன்மை இல்லாத நிலையில் உள்ளது.

வாடிக்கையாளா்களின் நலன்கருதி, செயற் பொறியாளா் அலுவலகத்தை, பாக்கம் கிராமத்துக்கு மாற்றம் செய்வதைத் தவிா்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com