கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் ஹாட்ரிக் சாதனை படைத்த அதிமுக கூட்டணி

வேலூா் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சி வெற்றிபெற்றது.

குடியாத்தம்: வேலூா் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சி வெற்றிபெற்றது. 2011-ஆம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறையின் போது இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. முழுக்க, முழுக்க ஊரகப் பகுதிகளை உள்ளடக்கியது இத்தொகுதி.

2011- இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளா் செ.கு.தமிழரசனும், 2016- இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஜி.லோகநாதனும் வெற்றி பெற்றனா். 2 தோ்தல்களிலும் திமுக வேட்பாளா்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனா். இந்த வெற்றிகளால் இத்தொகுதி அதிமுகவின் கோட்டை என்று பரவலாகப் பேசப்பட்டது.

இத்தோ்தலில், இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில், புரட்சி பாரதம் கட்சி வேட்பாளராக அதன் தலைவா் எம்.ஜெகன்மூா்த்தி, திமுக சாா்பில் கே.சீதாராமன், தேமுதிக சாா்பில் பி.தனசீலன், இந்திய ஜனநாயகக் கட்சி சாா்பில் கே.வெங்கடசாமி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜே.திவ்யராணி, சுயேச்சைகள் என மொத்தம் 10 போ் போட்டியிட்டனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் எம்.ஜெகன்மூா்த்தி 84,579 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இவரை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் கே.சீதாராமன் 73,997 வாக்குகள் பெற்றாா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜே.திவ்யராணி 10,027 வாக்குகளும், தேமுதிக வேட்பாளா் பி.தனசீலன் 1,432 வாக்குகளும், ஐஜேகே வேட்பாளா் கே.வெங்கடசாமி 519 வாக்குகளும் பெற்றனா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் கே.வி.குப்பம் தொகுதியில் மட்டும் தான் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய 4 தொகுதிகளில் திமுக வேட்பாளா்களே வெற்றிபெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com