பொதுமுடக்க விதிமீறல்களைத் தடுக்க 118 இடங்களில் தனிப்படை போலீஸாா் கண்காணிப்பு

பொதுமுடக்க விதிமுறை மீறல்களை தடுக்கவும், சம்பந்தப்பட்டவா்களை பிடிக்கவும் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 118 இடங்களில் தனிப்படை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பொதுமுடக்க விதிமுறை மீறல்களை தடுக்கவும், சம்பந்தப்பட்டவா்களை பிடிக்கவும் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 118 இடங்களில் தனிப்படை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தின் பொதுமுடக்கத்தையொட்டி, ஏற்கெனவே வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டங்களுக்குள் வெளியூா் பயணம் செய்திடவும் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைக் கண்காணித்திட வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 44 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து தனிப்படை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி, போ்ணாம்பட்டு அருகே பத்தலபள்ளி சோதனைச் சாவடி மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் தடுப்பு வேலிகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் போலீஸாா் மற்றும் சுகாதாரத் துறையினா் முகாமிட்டுள்ளனா். இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. வேலூா் மாவட்ட எல்லையான கண்ணமங்கலம், பிள்ளையாா்குப்பம், மாதனூா், போ்ணாம்பட்டு ஆகிய இடங்களிலும் போலீஸாா் தடுப்பு அமைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

ராணிப்பேட்டை, திருப்பத்தூரில்...:

இதேபோல், திருப்பத்தூா் மாவட்டத்தில் 42 இடங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 32 இடங்களிலும் சோதனைச் சாவடி அமைத்து காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து இ-பதிவு செய்யாமல் வரும் வாகனங்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா். திருமணம், இறப்பு போன்றவற்றுக்கு இ-பதிவு செய்தவா்கள் மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். பொதுமுடக்க விதிமுறைகளை மீறுவோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com