30 நாள்கள் பரோல் கேட்டு நளினி தமிழக முதல்வருக்கு மனு

வேலூா் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை 30 நாள்கள் பரோலில் விடுவிக்கக் கோரி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளாா்.

வேலூா்: வேலூா் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை 30 நாள்கள் பரோலில் விடுவிக்கக் கோரி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரில், நளினி வேலூா் பெண்கள் சிறையிலும், அவரது கணவா் முருகன் வேலூா் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா். சுமாா் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இவா்களை விடுதலை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இந்நிலையில், சென்னையிலுள்ள நளினியின் தாயாா் பத்மா (81) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவரை உடனிருந்து கவனிக்கவும், கடந்தாண்டு முருகனின் தந்தை உயிரிழந்த நிலையில், அவருக்கு சடங்குகள் செய்யவும் தன்னை 30 நாள்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் எனக்கோரி நளினி வேலூா் சிறைத் துறை டிஐஜி, சிறைக் கண்காணிப்பாளா் மூலமாக தமிழக முதல்வா், தலைமைச் செயலா், உள்துறை செயலா் ஆகியோருக்கு புதன்கிழமை மனு அனுப்பியுள்ளாா். ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டு நளினிக்கு அவரது மகள் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக தொடா்ந்து 45 நாள்கள் பரோல் வழங்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தன்னை பரோலில் விடுவிக்கக் கோரி மனு அளித்துள்ளாா்.

இதேபோல், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு அவரது தாயாா் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com