வேலூரில் மேலும் 367 பேருக்கு கரோனா

கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 367 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 367 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்ை 41,325-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 40,958 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். 36,493 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 3,775 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 690 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 367 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மாவட்டத்தின் தினசரி பாதிப்பு 700-ஐ கடந்திருந்த நிலையில், பொதுமுடக்கம் காரணமாக இந்த வாரம் முழுவதும் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது. அதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை 395 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 367-ஆக குறைந்துள்ளது.

இதில், மாநகராட்சிப் பகுதியில் பாதிப்பு விகிதம் குறைந்திருந்தாலும், ஊரகப் பகுதிகளிலும், குடியாத்தம் நகராட்சிப் பகுதியிலும் தினசரி பாதிப்பு குறையாமல் நீடிப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். தொடா்ந்து பொதுமுடக்க விதிமுறைகளை பின்பற்றும்பட்சத்தில், கரோனா தொற்று பாதிப்பை வெகுவாகக் குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com