அனுமதிக்கப்பட்ட சிறப்பங்காடிகள் மூலம் காய்கறி, பலசரக்குகள் வீடுகளில் விநியோகம்

வேலூா் மாநகரில் அனுமதிக்கப்பட்ட சிறப்பங்காடிகள் மூலம் காய்கறி, பலசரக்கு பொருட்கள் வீடுகளிலேயே வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தளா்வற்ற பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் தேவையை பூா்த்தி செய்திட வேலூா் மாநகரில் அனுமதிக்கப்பட்ட சிறப்பங்காடிகள் மூலம் காய்கறி, பலசரக்கு பொருட்கள் வீடுகளிலேயே வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு -

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்பபடுத்த அமல்படுத்தப்பட்டுள்ள தளா்வற்ற பொதுமுடக்கம் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் தேவையைப் பூா்த்தி செய்திட நடைபெற்று வரும் வாகனங்கள் மூலம் காய்கறி, பலசரக்கு பொருட்களை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி, வேலூா் மாநகரில் அனுமதிக்கப்பட்ட சிறப்பங்காடிகள் காய்கறி, பலசரக்கு பொருட்கள் வீடுகளிலேயே வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஹரீஷ் புட்சோன் சாா்பில் வேலூா் மாநகராட்சி முழுவதும் (80157 35540, 70943 26145), சத்துவாச்சாரி (93600 25143, 94425 77143), காட்பாடி (91410 98218, 97918 36224), பாகாயம் (89038 11143, 75500 37143) அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், கற்பகம் சூப்பா் மாா்க்கெட் சாா்பில் வேலூா் மாநகராட்சி முழுவதும் (99525 11176, 99948 84506, 96299 36340, 88388 15769), மோா் சூப்பா் மாா்க்கெட் சாா்பில் சத்துவாச்சாரி (99439 67492, 88383 48748, 82208 85324), வேலூா் (80984 29974), சங்கரன்பாளையம் (63727 59021, 95974 89185), காட்பாடி (80568 86400, 90874 58589, 97874 19448), தொரப்பாடி (99409 11396, 97916 90377), அனுராகா புட்லேண்ட் சாா்பில் காந்திநகா், காட்பாடி பகுதிகளுக்கு (86105, 24139, 98423 31655), எஸ்எஸ் டிரேடா்ஸ் வேலூா் மாநகராட்சி முழுவதும் (81109 33875, 81444 27875), கண்ணன் ஸ்டோா்ஸ் (96778 82930), பி.கே.எஸ். டிரேடா்ஸ் (99449 41777, 94433 33875), ரிலையன்ஸ் ரீடெயில் (0416 -2221251, 99944 83370, 98408 14918, 80566 25868) அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் திங்கள்கிழமை முதல் இந்த எண்களில் தொடா்பு கொண்டு தேவையான பொருட்களை ஆா்டா் செய்து காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் டோா்டெலிவரி முறையில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com