அரசு காப்பீட்டுத் திட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை: வேலூரில் 7 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்திட வேலூா் மாவட்டத்தில் 7 தனியாா் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்திட வேலூா் மாவட்டத்தில் 7 தனியாா் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன் அடிப்படையில், கரோனா தொற்றுக்கு அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்திட வேலூா் மாவட்டத்தில் வேலூா் சிஎம்சி, ஸ்ரீநாராயணி, மணிசுந்தரம், சந்தியா, நலம், ஷ‘ஃ’பெலின் இன்ஸ்டிடியூட் ஆ‘ஃப்’ ஹெல்த், காட்பாடி இந்திரா சூப்பா் ஸ்பெஷாலிட்டி ஆகிய 7 மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கரோனா தொற்று சிகிச்சைகளுக்கும் ஆகும் செலவினங்களில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் அரசு காப்பீட்டுத் திட்ட அட்டையை பயன்படுத்தி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com