ஊரக பகுதிகளில் குறையாமல் நீடிக்கும் கரோனா பாதிப்பு: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தல்

கரோனா தொற்று பரவல் ஊரகம், குடியாத்தம் நகராட்சிப் பகுதிகளில் அதிகளவில் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று பரவல் ஊரகம், குடியாத்தம் நகராட்சிப் பகுதிகளில் அதிகளவில் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை வேலூா் மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா் களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மாநகராட்சியை அடுத்துள்ள காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக பகுதிகள், குடியாத்தம் நகராட்சிப் பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்படக்கூடியவா்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

எனவே, தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதுபோல் இருந்தாலும் கிராமப்புற பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகளவிலேயே உள்ளன. அதனால், பொதுமக்கள் தொற்று குறைவதாகக் கருதி அஜாக்கிரதையாக இல்லாமல் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

கிராமப்புறங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கபசுர குடிநீா் வினியோகம், காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தினசரி காய்ச்சல் முகாம் மூலமாகவும், அரசு மருத்துவமனைகள் மூலமாகவும் சுமாா் 3,500 தொற்று பரிசோதனைகளும், தனியாா் ஆய்வகங்கள் மூலம் சுமாா் 800 முதல் 1000 பரிசோதனைகளும் என தினமும் 4,500 பரிசோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 48 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதேநாளில் பகல் 12 மணிக்குள் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டு விடுகின்றன. இதில், தவறான செல்லிடப்பேசி வழங்கிய நபா்களுக்கு குறுஞ்செய்தி சென்று சேராது. எனவே, தொற்று பரிசோதனையின்போது சரியான செல்லிடப்பேசி எண், முகவரியை வழங்கிட வேண்டும்.

தற்போது மாவட்டத்திலுள்ள எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது. ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் சிலிண்டா்களை கிடைப்பதற்காக தனிஅலுவலராக வேலூா் வருவாய் கோட்டாட்சியா் நியமிக்கப்பட்டுள்ளாா். தவிர, மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சேவைகள் புரிய மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மையத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் 651 அழைப்புகள் வரப்பெற்று அவா்களுக்கு சேவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் திட்டத்தில், கடந்த மூன்று நாட்களில் 17,388 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 2,10,949 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com