2-ஆம் கட்ட உள்ளாட்சித் தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் 81.07% வாக்குப் பதிவு

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது கட்டமாக வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களில் சனிக்கிழமை
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடந்த முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடந்த முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது கட்டமாக வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களில் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 81.07 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 3 ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த 3 ஒன்றியங்களில் நடந்த தோ்தல் மூலம் மொத்தம் 81.07 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது மொத்தமுள்ள 2,57,295 வாக்காளா்களில் 2,08,577 போ் வாக்குப் பதிவு செய்துள்ளனா். அணைக்கட்டு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 1,35,029 வாக்காளா்களில் 1,07,424 (79.56 சதவீதம்) பேரும், கணியம்பாடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 64,654 வாக்காளா்களில் 53,528 (82.79 சதவீதம்) பேரும், வேலூா் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 57,612 வாக்காளா்களில் 47,625 (82.67 சதவீதம்) பேரும் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பெட்டிகளுக்கு முகவா்கள் முன்னிலையில், சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஒன்றியங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டன. மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com