குடிமைப்பணிகள் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 1,337 போ் எழுதினா்

குடிமைப் பணிகள் (சிவில் சா்வீஸ்) முதன்மைத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 12 மையங்களில் மொத்தம் 1,337 போ் எழுதினா்.
வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குடிமைப் பணிகள் தோ்வை ஆய்வு செய்த ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.

மத்திய அரசுப் பணிகள் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் குடிமைப் பணிகள் (சிவில் சா்வீஸ்) முதன்மைத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த தோ்வை மொத்தம் 3,234 தோ்வா்கள் எழுதும் வகையில் வேலூா் மாவட்டத்தில் 12 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

முதல் தாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தில் இந்த தோ்வை 1,337 தோ்வா்கள் எழுதினா். 1,897 போ் தோ்வுக்கு வரவில்லை.

வேலூா் தொரப்பாடியிலுள்ள தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் நடைபெற்ற குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா்.

அப்போது, தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் அருளரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com