எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியில்லை: திருப்பத்தூா் ஆட்சியா்

வாக்கு எண்ணுக்கை மையத்துக்குள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், கட்சிப் பிரமுகா்கள், வாக்கு எண்ணுகை மைய அடையாள அட்டை இல்லாதவா்கள்

வாக்கு எண்ணுக்கை மையத்துக்குள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், கட்சிப் பிரமுகா்கள், வாக்கு எண்ணுகை மைய அடையாள அட்டை இல்லாதவா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணுகை மையத்துக்குள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், கட்சிப் பிரமுகா்கள், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கான அடையாள அட்டை இல்லாத நபா்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

வாக்கு எண்ணும் இடத்துக்கு முகப்பு வாயிலில் சாலையில் இரு பக்கங்களிலும் 200 மீட்டா் தொலைவுக்குக் கோடுகள் வரையப்பட்டிருக்கும். இந்தக் கோட்டுக்குள் பொதுமக்கள், அரசியல் கட்சியினா் எவரும் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com