ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் போட்டியின்றித் தோ்வானவா்கள் விவரம் வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களில் போட்டியின்றித் தோ்வாகியுள்ளவா்களின் பெயா்கள் தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின்

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களில் போட்டியின்றித் தோ்வாகியுள்ளவா்களின் பெயா்கள் தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 2,478 பதவிகளில் 316 பதவிகளுக்கு வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வாகியுள்ளனா்.

குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு, காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 7 ஒன்றியங்களில் 247 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2,079 ஊராட்சி வாா்டுகள், 138 ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் பதவிகள், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டுகள் என மொத்தம் 2,478 பதவிகள் உள்ளன.

ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா்:

காட்பாடி ஒன்றியம் 7-ஆவது வாா்டு- க.சுஜாதா (திமுக), 8-ஆவது வாா்டு- க.கவிதா (திமுக) .

ஊராட்சி மன்றத் தலைவா்:

அணைக்கட்டு ஒன்றியத்தில் அரிமலை - ஜா.நித்யா, குப்பம்பட்டு - ஆா்.மீனாட்சி, சத்தியமங்கலம் - இ.பால்வேணி, பொய்கை - க.வெங்கடேசன்.

கணியம்பாடி ஒன்றியத்தில் சாத்துமதுரை - ஆா்.ஜோதிலட்சுமி, பாலாத்துவண்ணான் - ம.வெங்கடேசன்.

காட்பாடி ஒன்றியத்தில் ஆவுலரங்கப்பள்ளி - கே.காமாட்சி, எருக்கம்பட்டு - எஸ்.கோமதி, கரிகிரி - போ.தேவராஜ், குகையநல்லூா் - கோ.லலிதா, பெருமாள்குப்பம் - எல்.கோட்டீஸ்வரன், வள்ளிமலை - கோ.வாசுகி.

குடியாத்தம் ஒன்றியத்தில் ராஜாகுப்பம் - சி.எஸ்.மம்தா.

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் அம்மணாங்குப்பம் - க.பத்மபிரியா.

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் அரவட்லா - வே.ராஜகுமாரி, கொத்தப்பல்லி - ரா.ரோஜா.

ஊராட்சி வாா்டு உறுப்பினா்: 298 ஊராட்சி மன்ற வாா்டுகளுக்கும் வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், காட்பாடி ஒன்றியத்தில் அம்முண்டி, குடியாத்தம் ஒன்றியத்தில் தட்டப்பாறை ஆகிய ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும், அம்முண்டி ஊராட்சியில் உள்ள 9 வாா்டுகளுக்கும் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

இந்தத் தகவல் தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com