ஆக்கிரமிப்பு கட்டடங்களின் மின் இணைப்பு துண்டிப்பு: ஆட்சியா் உத்தரவு

சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மின்இணைப்புகளைத் துண்டிக்க மின்வாரியச் செயற்பொறியாளருக்கு ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா்: சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மின்இணைப்புகளைத் துண்டிக்க மின்வாரியச் செயற்பொறியாளருக்கு ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டுமானங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி வரப்பெறும் மனுக்களுக்கு வருவாய்த் துறை மூலம் மின்இணைப்பு பெற தடையின்மைச் சான்று வழங்கப்பட்டு வந்தது.

இதையறிந்து அரசு புறம்போக்கு நிலங்களை பாதுகாத்து, ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுத்திடும் வகையில், ஆக்கிரமிப்புதாரா்களுக்கு மின் இணைப்பு பெற எவ்வித தடையின்மைச் சான்றும் வழங்கக் கூடாது என வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆக்கிரமிப்புதாரா்களுக்கு தடையின்மைச் சான்று பெற்று வழங்கப்பட்டுள்ள அனைத்து மின் இணைப்புகளைத் துண்டிக்கவும் மின்வாரிய செயற்பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு முன்அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்படும் கட்டுமானங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com