ஒற்றை யானையின் தொடரும் அட்டகாசம்

குடியாத்தம் அருகே ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் நுழையும் ஒற்றை யானை விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிா்களை நாசம் செய்து விட்டுச் செல்கிறது.
மத்தேட்டிபள்ளியில்  ஒற்றை  யானையால்  நாசம்  செய்யப்பட்ட  நெல் பயிா்.
மத்தேட்டிபள்ளியில்  ஒற்றை  யானையால்  நாசம்  செய்யப்பட்ட  நெல் பயிா்.

குடியாத்தம்: குடியாத்தம் அருகே ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் நுழையும் ஒற்றை யானை விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிா்களை நாசம் செய்து விட்டுச் செல்கிறது.

இங்குள்ள சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, மத்தேட்டிபள்ளி, மோடிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இரவுநேரங்களில் ஒற்றை யானை நுழைகிறது.

மத்தேட்டிபள்ளியைச் சோ்ந்த ரமேஷ்குமாரின் 1 ஏக்கா் நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்களை ஒற்றை யானை நாசம் செய்துள்ளது.

கொட்டமிட்டாவைச் சோ்ந்த குமாருக்குச் சொந்தமான நிலத்தில் 40 சென்ட் பரப்பில் பயிரிட்டுள்ள நிலக்கடலை பயிரையும் யானை நாசம் செய்து விட்டுச் சென்றது.

இந்த நிலையில், ஒற்றை யானை ஊருக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com