கே.வி.குப்பம் ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

கே.வி.குப்பம் வட்டத்தில், வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா்.

குடியாத்தம்: கே.வி.குப்பம் வட்டத்தில், வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா்.

இங்குள்ள காங்குப்பம் கிராமத்தில் நடைபெறும் கரோனா தடுப்பூசி மையத்தை அவா் ஆய்வு செய்தாா். அங்குள்ள மூலகாங்குப்பம் கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள்,பொது நூலகம் அமைத்தல், சாலைகளை சீரமைத்தல், அங்கு வசிக்கும் வீடற்ற மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குதல், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முதியோா் உதவித்தொகை வழங்குதல் ஆகியன குறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தாா்.

குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், கே.வி.குப்பம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலா் திவ்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com