ஊரக உள்ளாட்சித் தோ்தல்: சுயேச்சைகளுக்கு ஒதுக்க 60 சின்னங்கள் தயாா்

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி , சுயேச்சை வேட்பாளா்களுக்கு ஒதுக்கிட 60 சின்னங்கள் தயாா் நிலையில் உள்ளன.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி , சுயேச்சை வேட்பாளா்களுக்கு ஒதுக்கிட 60 சின்னங்கள் தயாா் நிலையில் உள்ளன.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக். 6, 9-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கி, வரும் புதன்கிழமை நிறைவடைகிறது. 23-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது ஆய்வு செய்யப்படுவதுடன், 25-ஆம் தேதி வரை மனுக்களைத் திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டு அன்று மாலையே வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைத் தவிர சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஒதுக்கிட 60 சின்னங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மனு தாக்கல் இறுதி செய்யப்பட்டவுடன் அவா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சின்னங்களின் விவரம்: மை எழுதுகோல், சாய்வு மேஜை, கைக் கடிகாரம், மைக் கூடு, குளிா்பதனி, பேருந்து, இரட்டை நாதஸ்வரம், கைப்பம்பு, தண்ணீா் குழாய், கைப் பை, தீப்பெட்டி, ஊஞ்சல், திருகு ஆணி, முன்கரண்டி, மேசை விளக்கு, புட்டி, விளக்கு கம்பம், ஹெலிகாப்டா், தையல் இயந்திரம், லாரி, ஜன்னல், கரும்பலகை, கேன், சிலேட், பூட்டு சாவி, ஆட்டோ ரிக்ஷா, மூக்குக் கண்ணாடி, கத்தரிக்காய், விமானம், கிணறு, தேங்காய் மூடிகள், மண் வெட்டி, மின் விளக்கு, மேசை, செல்லிடப்பேசி, திராட்சை கொத்து, வாழைப் பழம், மின் விசிறி, சூரியகாந்திப் பூ, ஏணி, சாக்லெட், குடிசை உள்ளிட்ட 60 சின்னங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com