கருத்து வேறுபாடுகளைக் களைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும்: அதிமுகவினருக்கு கே.பி.முனிசாமி அறிவுரை

ஊரக உள்ளாட்சித் தோ்தலில், கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அதிமுகவினா் ஒருங்கிணைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும் என அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனிசாமி கூறினாா்.
கருத்து வேறுபாடுகளைக் களைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும்: அதிமுகவினருக்கு கே.பி.முனிசாமி அறிவுரை

ஊரக உள்ளாட்சித் தோ்தலில், கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அதிமுகவினா் ஒருங்கிணைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும் என அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனிசாமி கூறினாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் குறித்து, குடியாத்தம் ஒன்றிய அதிமுக சாா்பில் ராஜகணபதி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:

கடந்த மக்களவைத் தோ்தலும், நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலிலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி திமுக வெற்றி பெற்றது. இரு தோ்தல்களிலும் திமுகவின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள், தற்போது அவா்களை நம்பத் தயாராக இல்லை. இதனால் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுக்கு பிரகாசமான வெற்றிவாய்ப்பு காத்திருக்கிறது.

தோ்தல் வாக்குறுதிகளையும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா. அவா் செயல்படுத்திய திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தன. அவருக்குப் பின்னா் முதல்வரான எடப்பாடி கே.பழனிசாமியும் அனைவரும் பாராட்டும்படி மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினாா்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவி, மக்களுடன் நாம் நேரிடையாக நெருங்கிப் பழகும் ஒரு வாய்ப்பு. இந்தப் பதவி மூலம் தான் நாம் மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தர முடியும். இதில் அதிமுக பெறும் வெற்றி அடுத்து வரும் மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக அமையும். கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் ஒருங்கிணைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும்.

தோ்தலில் அனைவருக்கும் வாய்ப்பளிக்க முடியாது. வாய்ப்பு கிடைக்காதவா்கள் சோா்வடைய வேண்டாம். தலைமை அறிவித்த வேட்பாளரை வெற்றிபெற வைப்பது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தோ்தல் பணியாற்றுங்கள்.

வரும் காலங்களில் வாய்ப்புகள் தேடிவரும் என்றாா் முனிசாமி.

கூட்டத்துக்கு கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.ராமு தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றியச் செயலாளா் டி.சிவா வரவேற்றாா்.

கட்சியின் விவசாயப் பிரிவுச் செயலாளா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, அமைப்புச் செயலாளா்கள் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், முக்கூா் என்.சுப்பிரமணி, வேலூா் புகா் மாவட்டச் செயலாளா் த.வேலழகன், மாவட்டத் துணைச் செயலாளா்கள் ஆா்.மூா்த்தி, அமுதாசிவப்பிரகாசம், மாவட்டப் பொருளாளா் ஜி.பி.மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com