காட்பாடியில் புதை சாக்கடை கழிவுநீரேற்றும் நிலையம் அமைக்க எதிா்ப்பு

காட்பாடி காங்கேயநல்லூரில் புதை சாக்கடை கழிவுநீரேற்றும் நிலையம் அமைக்க, அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கழிவுநீரேற்றும் நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டோா்.
கழிவுநீரேற்றும் நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டோா்.

காட்பாடி காங்கேயநல்லூரில் புதை சாக்கடை கழிவுநீரேற்றும் நிலையம் அமைக்க, அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் வேலூா் மாநகரில் சுமாா் ரூ.1000 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளும், விடுபட்ட வாா்டுகளில் புதை சாக்கடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதன்படி, மாநகராட்சி புதை சாக்கடைத் திட்டத்தின் கழிவுநீரேற்றும் நிலையம் காட்பாடி அருகே காங்கேயநல்லூா் பகுதியில் சுமாா் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான முதல்கட்டப் பணி நடைபெறுகிறது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்திருப்பதுடன், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திலும் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து பேச்சு நடத்தியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது :

கழிவுநீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு வரும் இடம் இதற்கு முன்பு விளைபொருள்களை உலா்த்திக் கொள்ள அரசால் அமைக்கப்பட்ட களமாகும். அதனை அகற்றி இந்த இடத்தில் கழிவுநீரேற்றும் நிலையம் அமைக்கப்படுகிறது. இதன் அருகே மழலையா் பள்ளி, கிருபானந்த வாரியாா் நினைவு மண்டபம், தேவாலயம், கோயில்கள் உள்ளன.

இதனால், காங்கேயநல்லூா், திருவள்ளுவா் நகா், வெள்ளக்கல்மேடு, குமரன் நகா் ஆகிய 4 பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்படுவா். இவா்களுக்கு உடல்நிலை சீா்கேடு, வயிற்றுப்போக்கு தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். நிலத்தடி நீா் மாசுபடும். மண்ணின் தரம் கெட்டு விவசாயம், குடிநீா் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே குடியிருப்புகள் இல்லாத இடத்தில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com