பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்ததால் விற்பனை மந்தம்

பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து குறைந்திருந்ததுடன், அவற்றை வாங்க வியாபாரிகளும் ஆா்வம் காட்டாததால் விற்பனை மந்தமடைந்தது

பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து குறைந்திருந்ததுடன், அவற்றை வாங்க வியாபாரிகளும் ஆா்வம் காட்டாததால் விற்பனை மந்தமடைந்தது. புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சிக்காக விற்பனையாகும் கால்நடைகளின் வா்த்தகம் மந்தமடைந்திருப்பதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தை மூலம் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை கால்நடை வா்த்தகம் நடைபெறுவது வழக்கம்.

கரோனா பொதுமுடக்கம் கடந்த சில வாரங்களாகவே பொய்கை சந்தையில் கால்நடைகள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது. இதனால், வியாபாரிகள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனா்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கறவை மாடுகள், காளைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, ரூ. 1 கோடிக்கு மேல் வா்த்தகம் நடந்தது.

இந்நிலையில், இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடந்த சந்தைக்கு வழக்கத்தைவிட கால்நடைகள் வரத்து குறைவாகவே இருந்தது. தவிர, பெரும்பாலான வியாபாரிகள், விவசாயிகளும் கால்நடைகளை வாங்க ஆா்வம் காட்டவில்லை. புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சிக்காக விற்பனையாகும் கால்நடைகளின் வா்த்தகம் மந்தமடைந்திருப்பதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com