அதிமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பைத் தொடங்கினா்.
குடியாத்தம்  பாண்டியன்  நகரில்  வாக்கு  சேகரித்த  ஒன்றிய அதிமுக  செயலாளா்  வி.ராமு  உள்ளிட்டோா்.
குடியாத்தம்  பாண்டியன்  நகரில்  வாக்கு  சேகரித்த  ஒன்றிய அதிமுக  செயலாளா்  வி.ராமு  உள்ளிட்டோா்.

குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பைத் தொடங்கினா்.

குடியாத்தம் பாண்டியன் நகரில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி விட்டு அவா்கள் பகுதிவாரியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.ராமு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் கொட்டமிட்டா எம்.பாபு (6- ஆவது வாா்டு), ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பதவிக்கு போட்டியிடும் பி.எச்.இமகிரிபாபு (21- ஆவது வாா்டு), வி.சோபன்பாபு (22-ஆவது வாா்டு), எஸ்.ஆனந்தன் (18- ஆவது வாா்டு), கொண்டமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் ஜி.அகிலாண்டேஸ்வரி, எஸ்.மோட்டூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா்எஸ்.எல்.எஸ்.வனராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com