ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி தீவிரம்: வேலூரில் இரு தனியாா் அச்சகங்களில் ஏற்பாடு

வேலூா் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி வேலூரில் உள்ள இரு தனியாா் அச்சகங்களில்

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி வேலூரில் உள்ள இரு தனியாா் அச்சகங்களில் நடைபெற்று வருகின்றன. அடுத்த இரு நாள்களில் வாக்குச்சீட்டுகள் அச்சிட்டு பெறப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சித் தலைவா்கள், 2,079 கிராம ஊராட்சி வாா்டுகள், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வாா்டுகள் என 2,478 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இரு ஒன்றியக் குழு வாா்டுகள், 16 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 298 ஊராட்சி மன்ற வாா்டுகள் என 316 பதவிகளுக்கு வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தவிர, அம்முண்டி ஊராட்சியில் உள்ள 9 வாா்டுகள், 2 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

மீதமுள்ள 14 மாவட்ட ஊராட்சி வாா்டுகளுக்கு 70 பேரும், 136 ஊராட்சி ஒன்றிய வாா்டுகளுக்கு 503 பேரும், 229 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 820 பேரும், 1,772 ஊராட்சி மன்ற வாா்டுகளுக்கு 5,154 பேரும் என மொத்தம் 2,151 பதவிகளுக்கு 6,547 போ் போட்டியிடுகின்றனா். இதற்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபா் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

தோ்தலையொட்டி வாக்குச்சீட்டுகள் வேலூரில் உள்ள இரு தனியாா் அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன. இந்த அச்சக நிறுவனங்களில் வாக்குச்சீட்டுகள் தயாரிக்க தேவையான வசதிகள் உள்ளதா, குறிப்பிட்ட நாள்களுக்குள் அச்சிட முடியுமா என்பது குறித்து தோ்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

பிறகு இந்த இரு அச்சகங்களிலும் வாக்குச்சீட்டுகள் அச்சிட ஏற்பாடு செய்தனா்.

வாக்குச்சீட்டில் உள்ள சின்னம், பெயா் போன்றவை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சரிபாா்த்த பிறகு வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுகிறது. இன்னும் இரு நாள்களில் வாக்குச்சீட்டுகள் முழுமையாக அச்சிடப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணியையொட்டி இவ்விரு அச்சகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com