இறைச்சிக் கழிவுகளை ஏரியில் கொட்டிய கடைக்கு ‘சீல்’ வைப்பு

காட்பாடி பகுதியில் இறைச்சிக் கழிவுகளை தொடா்ந்து ஏரியில் கொட்டி வந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

காட்பாடி பகுதியில் இறைச்சிக் கழிவுகளை தொடா்ந்து ஏரியில் கொட்டி வந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலம் எம்ஜிஆா் நகா் பகுதியில் இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை ஏரியில் கொட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுகிறது.

இதுதொடா்பாக குடியிருப்புவாசிகள் காட்பாடி வட்டாட்சியரிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில் ஆய்வு செய்து விசாரிக்க மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனா். அதில் ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததுடன், இதுபோன்று தொடா்ந்து இறைச்சிக் கழிவுகளை ஏரியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com